Monday, August 13, 2012

ஜெயலலிதாவின் புனிதயாத்திரை மானிய அறிக்கையும்:தினமணியின் இந்துத்துவ சார்பும் தன்மையும்

டந்த சில தினங்களுக்கு முன்னால் பரவலாக எல்லா பத்திரிக்கைகளிலும் இந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு,முக்திநாத்,மானசரோவர் மற்றும் ஜெருசலேம் போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை  மேற்கொள்ள இந்த நிதி ஆண்டில் தமிழக அரசு 1.25 கோடி ரூபாயைமானியமாக ஒதிக்கியுள்ள முதலமைச்சரின்  அறிக்கை  இடம்பெற்றிருந்தது .

கடந்த சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இடையே நடந்த இலவச அறிவிக்கை போட்டிகளில் ஜெயா-விடம் இருந்து வந்த தேர்தல் அறிக்கைகளில் ஒன்று, இசுலாமியர்களின் ஹஜ் பயணம் போலவே இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் புனிதை யாத்திரை செல்ல மானியம் வழங்கப்படும் என்ற அறிக்கை .மக்களின் அடிப்படை மற்றும் அவசிய பிரச்சனைகள் பல இருக்க மக்களின் வரிபணத்தை வீண் செலவு செய்வதில் கருணாநிதிக்கு நான் சளைத்தவர் அல்ல என்று மீண்டும் ஒருமுறை ஜெயா நிருபித்து உள்ளார்.

இந்நிலையில் ,உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் ஹஜ் மானியம் தொடர்பான வழக்கு ஒன்றில் கொடுத்துள்ள தீர்ப்பு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாக உள்ளது .பல இசுலாமிய அமைப்புகள் ஹஜ் மானியத்தை மதிய அரசு முழுமையாக ரத்து செய்ய அதனிடம் தொடர்ந்து கோரிவந்த நிலையில்,அது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்
''ஹஜ் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது .சிறுபான்மையினரை கவர மதிய அரசு இதை அரசியலாக்கிவிட்டதகவும் சுட்டிகாட்டிய அது புனித பயணங்களுக்கு அரசு மணியம் வழங்குவது சரியல்'' என்றும் கண்டித்திருந்தது.மேலும் ஹஜ் கமிட்டி செயல்படும் விதம் மற்றும் பக்தர்களை தேர்வு செய்யும் முறை பற்றியும் அது கேள்வி எழுப்பியிருதது.

பல இசுலாமிய அமைப்புகளின்  வரவேற்பினை பெற்றிருந்த இந்த தீர்ப்பு வெளியான இரண்டாவது தினம்(மே 10 2012) இந்த தீர்ப்பின் அடிப்படையில் தினமணி நாளிதழில் ''முள் மேல் விழுந்த சேலை'' என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று வெளிவந்திருந்தது .உச்சநீதிமன்ற தீர்ப்போடு தொடங்கும் அந்த தலையங்கம் அந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக அது நீள்கிறது.வேறெந்த இசுலாமிய நாடுகளிலும் கூட இல்லாத மரபு வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா ஏற்படுத்திவிட்டதாக வேதனைபடுகிறார் தலையங்கம் தீட்டிய வைத்தியநாதன் அவர்கள்.
மேலும் ஆற்காடு -இளவரசர் என்பாரது கருத்தையும்,1997 -லில் ஹஜ் மணியம் தொடர்பான வழக்கு ஒன்றில் பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் அது மேற்கோள் காட்டுகிறது .சென்ற ஆண்டு ஹஜ் மானியமாக அரசு செலவிட்ட ரூ .685 கோடியை ஏழை சிறுபான்மையினரின் நன்மைக்காக செலவிட்டிருந்தால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்திருக்கும் என்று இசுலாம் மதத்தலைவர்கள் கூறுவதாக கூறுகிறது.மேலும் இதில் பயனடையும் 1 .12 லட்சம் பேரில் பெரும்பாலானோர் ஏழை இசுலாமியர்கள் அல்ல என்றும் நல்லெண்ண தூது குழுக்கள் பெயரில் அதிகாரிகள் அரசை ஏமாற்றுவதாகவும்  அது  சுட்டிக்காட்டுகிறது.

மேலும் இந்தியாவில் உள்ள எல்லமதங்களுக்கும் புனித தளங்கள் உண்டு அவர்கள் அனைவரும் புனித பயண மானியம்  கோரினால் அரசு அதை செய்ய இயலுமா?அது நியாயமா ? என்று நியாயம் கேட்கிறது.
"முள்ளாக" உள்ள அரசியல் வாதிகள் ஒட்டு வங்கிக்காக இதை கைவிடாமல் இருப்பதாகவும் எனவே, இசுலாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த தீர்ப்பை உடனடியாக  அரசு செயல்படுத்த வலியுறுத்துவதே  தீர்வு என்று அது முடிக்கிறது.
இந்த தலையங்கத்தில் உள்ள  கருத்துக்களுக்கும் நமக்கும்  எவ்வித மற்று கருதும் கிடையாது.இந்த தலையங்கத்தில் பெரும்பாலான கருத்துகளை இசுலாம் மத தலைவர்களின் கருத்தாகவே அது முன்வைக்கிறது .மக்களின் வரிபணத்தை புனித பயனங்களுக்கென்று வீண்செலவு செய்வதைவிட மக்களின் நலதிட்டங்களுக்கென  அரசு செலவு செய்வதுதான் முறையானது.ஆனால் முதல்வரின் அறிக்கை வெளியாகியுள்ள இந்த சூழ்நிலையில் அந்த அறிக்கையை ஒரு செய்தியாக மட்டும் தந்துவிட்டு மவுனமாய் இருப்பது அதன் நடுநிலைமை தன்மை பற்றியும் அதன் கருத்தியல் சார்பு பற்றியும்  இயல்பாக கேள்வி எழுப்புகிறது.

அன்று, வாக்கு வங்கிக்காக ஹஜ் மானியத்தை அரசியல் கட்சிகள் கைவிடாமல் இருப்பதாக அங்கலாய்த்த தினமணி .அதே புனித பயண மானியத்தை தேர்தல் அறிக்கையாக்கி அதை நிறைவேற்ற உத்தரவிட்டிருக்கும் தமிழக அரசையோ அல்லது முதல்வரையோ கண்டிக்காமல் இருப்பது என்னவகையான "நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி " என்பது புரியவில்லை.
இசுலாமிய நாடுகளிலும் கூட இல்லாத மரபு வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா ஏற்படுத்திவிட்டதாக வேதனைபட்ட வைத்தியநாதன்,பன்நெடுங்கலமாக உழைப்பவர்களை  உறிஞ்சி உண்டு வாழும் உயர்சாதி  வருனமரபு  இந்து மதத்தில் உண்டென்பதால் அது அவருக்கு வேதனை தரவில்லையோ என்னவோ?

மேலும், இந்த மானிய ஒதுக்கீட்டில் பக்தர்கள் தேர்வு செய்யும் முறையில்  அரசு அதிகாரிகளின் லஞ்ச லாவண்யமும் அரசியல் சர்புகளுக்கும் இடமிருக்காது என்று எப்படி நம்புவது.ஹஜ் மானியத்தை சிறுபான்மையினர் நலத் திட்டத்துக்காகப் பயன்படுத்தியிருந்தால் மிகப் பெரும் அளவிலான முஸ்லிம்கள் பயன்பெற்று இருப்பார்கள் என்று இசுலாம் அமைப்பபுகள் கூறுவதாக சொல்லும் தினமணி.இந்த 1 .25 கோடி ஹஜ் மானியத்துடன் ஒப்பிட்டால் குறைவானது என்பதால் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டதா என்று தெரியவில்லை.

அன்று ஹஜ் மானியத்தை ரத்து  செய்ய இசுலாமிய மத அமைப்புகளை ஒன்றுகூட சொன்ன தினமணி,இந்த மானியத்தை ரத்து செய்ய இந்து,கிறிஸ்துவ  அமைப்புகளை ஒன்றுகூட சொல்ல தைரியம் "அஞ்சாத நெறியுடைய " தினமணி செய்யும் என்று நம்பலாமா?.இல்லை அது  பல இடங்களில் மெட்சும் இந்துமதத்தையும் அதன்  பக்தர்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு மவுனிக்கிறது  என்று கொள்ளலாமா?.

ஆக எது எப்படியோ தமிழக நாளிதழ்களில் தன்னை ஒரு நடுநிலையான நாளிதழாக காட்டிகொள்ளும் தினமணி அதன் நடுநிலைமையையும் ஒருசர்பற்ற தன்மையையும் மீண்டும் ஒருமுறை நியாய தராசில் வைத்து பார்க்கட்டும்,தராசின் "முள்" நியாயத்தையும் நெறியையும் குத்தி  கிழிக்காமல்  இருக்கட்டும்.

கட்டுரை ஆக்கம்:செ .அன்பரசன்

ஆதாரம்:
 

1 comment:

  1. ஒன்று செய்தி, இன்னொன்று தலையங்கம்.900 கோடி ரூபாய் மான்யமும் 1.25 கோடி மான்யமும் ஒன்றா.
    முஸ்லீம்களுக்கு ஹஜ் மான்யம் எத்தனை ஆண்டுகளாக வழங்கப்படுகிறது என்பது தெரியுமா.முஸ்லீம் அமைப்புகள் ஹஜ் மான்யம் வேண்டாம்,புறக்கணியுங்கள் என்று என்றாவது அறிக்கை விட்டுவிட்டுள்ளார்களா இல்லை அதை தவிர்த்துவிடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்களா.
    தினமணி இந்துக்களுக்கு மானசரோவர் செல்ல தரப்படும் மான்யத்தை வரவேற்று தலையங்கம் எழுதவில்லை. இந்த திட்டம் இப்போதுதான் அறிமுகமாகிறது.உச்சநீதிமன்றத்தின் கருத்தை மத்திய அரசு முழுதாக ஏற்றுள்ளதா என்பதை குறிப்பிடாமல் மறைக்கிறீர்களே அதில் உள்ள அரசியல் என்ன.
    நீங்கள் யாருக்கு ஆதரவாக எழுதுகிறீர்கள் என்பதை நாங்களும் கவனிக்கிறோம்.போலி செக்யுலர்,போலி இடதுசாரிகளே உங்களின் உண்மையான அக்கறைகள் எவை என்பது எங்களுக்கும் தெரியும்.

    ReplyDelete