Thursday, August 9, 2012

அண்ணா ஹசாரே இயக்கத்தைப் பற்றிய ஊடகச் சித்தரிப்பைக் குறைகூறுகிறார் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்சு -- தி இந்து (தமிழில் பாஸ்கர்)


பல இதழியளாலர்கள் புறவயமாகச் செய்தியை வெளியிடுவதற்குப் பதிலாக உணர்ச்சிவயப்பட்டு அண்ணா ஹசாரே இயக்கத்தின் அங்கமாகவே மாறிவிட்டனர் என்கிறார் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்சு.

இந்தூர் (மத்திய பிரதேசம்) நகரத்தில் நடந்த “அண்ணா ஹசாரே இயக்கமும் ஊடகங்களும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய அவர் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பெரும்பிரிவினர் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு பொறுப்பற்று செயற்பட்டனர் என்றார். இந்தி பத்திரிக்கைத்துறையில் சில இதழியலாளர்கள் பாபர் மசூதி சர்ச்சையின் போது கூட நிகழ்வுகளைப் புறவயமாக வெளியிடுவதற்கு பதிலாக தாமே “கரசேவகர்களாக” செயற்பட்டனர் என்பதையும் அதில் நினைவுகூர்கிறார். 

No comments:

Post a Comment