Sunday, June 3, 2012

சன் செய்திகள் நடுநிலையானவை அல்ல


  சன் தொலைக்காட்சி செய்திகளை கடந்த 10 நாட்களில் கவனித்தில் ஒரு உண்மை பளிச்சென்று புரிந்தது. மக்களின் பொது புத்தியில் ஜெயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றின் செய்திகள் ஒரு பக்கமானவை. அவைகள் சார்ந்துள்ள கட்சிகளை பிரதிபலிப்பதாக  உள்ளவை; சன் செய்திகள், பொதிகை செய்திகள், புதிய தலைமுறை செய்திகள் போன்றவை நடுநிலையானவை என்றும் பொதுமக்களின் மனங்கள் வரித்துள்ளன.  ஆனால், சன் செய்திகள் நடுநிலையானதல்ல; ஒரு பக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட  செய்திகளை மட்டும் திரும்ப திரும்ப ஒளி பரப்புகின்றன.


     2ஜி அலைக்கற்றை மகா ஊழலில் சிறையிலுள்ள குற்றவாளி முன்னாள் மைய அமைச்சர் ராஜா ஜாமீன் பெற்றதை பற்றியும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் பற்றியும் இந்த நாட்களில்  பல   பரபரப்பான செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. மற்ற தொலைக்காட்சி செய்திகளில் 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஏர்செல் நிறுவனம், அதன் முக்கிய பங்குதாரரான  தயாநிதி மாறன் சகோதரர்கள் பங்கு பற்றியும், ஆளும்காங்கிரஸ் கட்சிகரர்களுக்கு உள்ள பங்கு பற்றுயும் செய்திகள் தினமும் வெளிவருகின்றன. சன் செய்திகள் இவைகள் எதையும் ஒளிபரப்புவது கிடையாது. மாறன் சகோதரர்கள் ஊழலை பற்றிய செய்திகள் முற்றிலும் மறைக்கின்றன.


     கூடங்குளம் அணுஉலை பற்றிய செய்திகளில் அணுஉலை ஆதரவு செய்திகளை, அமைச்சர் நாராயணசாமி அளிக்கும் பேட்டிகளை தொடர்ந்து தினமும் சன்செய்திகள் ஒளிபரப்புகின்றன. இன்னும் சில நாட்களில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்பதை திரும்ப திரும்ப சன்செய்திகள் கூறுகின்றது. ஆனால் இடிந்த கரையில் தொடர்ந்து நடைபெறும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களை திட்டமிட்டு மறைக்க படுகின்றன. 24/5/2012 யில் சு.ப உதயகுமரர் அளித்த பேட்டி புதியதலைமுறையில்  உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. சன் செய்திகளில் அது பற்றி எதுவும் ஒளிப்பரப்பாகவில்லை.


மேலும், சில செய்திகள் திட்டமிட்டு மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிற்து 24 ஆம் தேதி - திருப்பூரில் காற்றாலை வெடித்து தீப்பந்துகள் பறக்கின்றன- விவசாய நிலங்கள் சேதம் - பொதுமக்களுக்கு பீதீ, ஆபாயம்  ….. இப்படி ஊதி ஊதி பெருக்குகின்றது. அன்று முழுக்க இந்த செய்தியை திரும்ப திரும்ப சன்செய்திகள் ஒளி பரப்பியது. காற்றாலை மிகவும் ஆபத்தான தொழிற்சாலை என்ற பிம்பத்தை கட்டி அமைக்க சன்செய்திகள் முயல்கிறது.


     அதே போல் எண்ணூர் அனல் மின்நிலையம், மேட்டூர் நீர்மின்நிலையம் ஆகியவற்றின் விபத்துகள்  ஊதிப் பெருக்கப்பட்ட  செய்திகளாக சன் செய்திகள் ஒளி பரப்பியது.. மின்சார பற்றாக்குறைக்கு இந்த விபத்துகள் காரணமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்பதாகவே பொது புத்தியில் பதிய வைக்கச் சன் செய்திகள் முயல்கின்றன.


     மாவோஸ்ட் இயக்க செயலாளர் விவேக் கைதை ஒட்டி அவரின் துணைவியார் தோழர் பத்மா பற்றி மிகவும் மிகைப்படுத்தப்பட்ட பீதியூட்டக்கூடிய செய்திகளைசன் தொலைக்காட்சி ஒவ்வொரு செய்திகளிலும் இதை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தன. அவர் பெண் இராணுவ காமண்டர் - மிகவும் ஆபத்தானவர்…. என்று பத்மா பற்றி செய்திகள் மிகவும் உள்நோக்கம் கொண்டவைகளாக ஒளி பரப்பப்பட்டன. அதே சமயம் பத்மா பற்றிய செய்திகள் தவறானவை, உள்நோக்கம் கொணடவை என்று மனித உரிமை அமைப்பினர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியச் செய்தியை ஒளிப்பரப்பவில்லை. திட்டமிட்டுச் சன் செய்திகள் அதை மறைத்து விட்டன. .

சன் செய்திகள் நடுநிலையானவை அல்ல என்றப் புரிதலுடன் அதை பார்க்க மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். செய்திகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுவது ஆரோக்கியமான சமூகத்தின் அணுகுமுறையாக இருக்கும்.

                                                                  ** நடராசன்

2 comments:

  1. கூடங்குளம் தொடர்பாகவும் சன் தொலைக் காட்சி அப்படித்தான் செய்தி ஒளிபரப்பியது

    ReplyDelete
  2. டாடா நிறுவனத்தின் ‘தேஜஸ்வினி’ நலத்திட்டம் குறித்த விளம்பரப்படத்தையும் அதனை எடுத்த லீனா மணிமேகலையின் அரசியலையும் விமர்சியுங்கள்.எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete