Thursday, May 31, 2012

தினத்தந்தியின் இனவாத புத்தி

இந்தியாவில் பல நேரங்களில் மொழி பத்திரிக்கைகள் (vernacular  newspapers ) பேரினவாதத்தையும் பெரும்பான்மை மதவாதத்தையும் அவ்வபோது ஆதரித்து வருகின்றன. அதற்கு தினத்தந்தியும் விதிவிலக்கல்ல. சென்னைக்கு அருகேயும் தமிழகத்தில் ஏனைய இடங்களிலும் அண்மையில் நடந்த வங்கி கொள்ளைகளை தொடர்ந்து வட இந்திய எதிர்ப்பு பாசிச பிரசாரம் ஊடகங்களில் அரங்கேறி வருகிறது.
 
 

வட இந்தியர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் குற்ற செயல்கள் நின்றுவிடுவது போல் இத்தகைய பிரசாரம் நடைபெற்று வருகிறது.இதன் அங்கமாக அரசியல் சாசனத்துக்கு விரோதமாக அவர்களின் அடையாள அட்டைகளை கேட்பது மட்டும் அல்லாமல் கைரேகைகளை பதிவும் செய்கிறார்கள்.இவ்வாறாக வட இந்தியர்களை குற்றவாளிகளாக சித்தரித்து போலி மோதல்கள் மூலம்  போலீசார் அவர்களை கொல்வதற்கு வழி செய்யபடுகிறது.
 
இந்த போக்கின் தொடர்ச்சியாக 31/5/12 தினத்தந்தி (19ம் பக்கம்) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.  'வட இந்திய கலாசாரம் தமிழ்நாட்டில் பரவுகிறது, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு'  என 3  பத்தி செய்தி வெளியிட்டுள்ளது. என்னவோ தமிழர்கள் அனைவரும் உரிய பயண சீட்டுடன் பயணம் செய்வது போலவும் வட இந்தியர்கள் மட்டும் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்று ஆதாரம் இல்லாமல் இந்த செய்தி வெளியிடபட்டுளது.
 
பாஸ்கர்

கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ‘இந்து’ நாளிதழ் அடக்கி வாசித்த கதை


வெகு மக்களைச் சென்றடையும் செய்தி ஊடகங்களுள் நாளிதழ்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. நமது செய்தி இதழ்களில் பரவலாக விநியோகம் ஆகும் இதழ்கள் பலவும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படுபவையாக உள்ளன. இவ்வகையில் கார்ப்பரேட் நலநோக்கின் அடிப்படையில் அல்லது கார்ப்பரேட் கொள்கைகளையே மக்கள் நலக் கொள்கைகளாகப் பிரச்சாரம் செய்யும் வகையில் அந்த இதழ்கள் பல்வேறு சமயங்களில் செயல்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
அணு உலைகளைத் தொடர்ச்சியாக ஆதரித்துவரும் கார்ப்பரேட் ஊடகங்கள் அணு உலை குறித்த மாற்றுக்குரல்களுக்கு இடமளிப்பவையாக இருந்தபோதிலும் தமது கொள்கைகளுடன் வலுவான மோதல் ஏற்படுகிறபோது மாற்றுக்குரல்களை இவை முடக்கவே செய்கின்றன. கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திவரும் டாக்டர் உதயகுமாரின் அணு உலைகளுக்கு எதிரான கட்டுரைத் தொடரை வெளியிட்டஆனந்த விகடன்இதழ் தான், அணு ஆதரவாளர் அப்துல்கலாமிற்கு எழுதப்பட்ட .மார்க்ஸின் எதிர்வினையை வெளியிட மறுத்தது. இதற்கு அந்நிறுவனம் சொல்லிய காரணம் : தொடர்ந்து அணு உலைக்கு எதிரான கட்டுரை வெளியிடுவதை நிர்வாகம் விரும்பவில்லை என்பதுதான்.
கல்பாக்கம் அணு உலை குறித்தஇந்துநாளிதழின் செய்திகளை ஆய்விற்கு உட்படுத்திய ஆய்வாளர் ரோஷன் சந்திரன், தனது ஆய்வு முடிவுகளை ‘HOOT’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  7 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையை அடுத்த கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பின்மை குறித்தும் அதில் ஏற்பட்ட பல விபத்துகள் குறித்தும்இந்துநாளிதழ் செய்திகள் வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று அணு உலைக்கு எதிராக ஒரு தீவிரமான போராட்டம் தமிழகத்தில் உருப்பெற்ற சூழலில், அணு ஆற்றலுக்கு எதிரான மாற்றுக் குரல்களைப் பற்றி அடக்கி வாசித்து கல்பாக்கம் அணு உலையும் ஒட்டுமொத்தமாக அணு ஆற்றலும் பாதுகாப்பானது என்கிற கருத்துக்கு அதிக அழுத்தத்தையும் அதிக இடத்தையும் அளிக்கத் தொடங்கியுள்ளதை இவ்வாய்வு நிறுவுகிறது. இனி, ரோஷன் சந்திரனின் ஆய்வு முடிவுகள்: ]
அறிமுகம்
கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் தரவுகளை அணுசக்தித் துறை அக்டோபர் 2011-இல் வெளியிட்டது. அணுசக்தித் துறை வெளியிட்ட இத் தரவுகள் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் வழக்கத்தை விட அதிகமாக இல்லை என்று சொல்லியது. ஆனால், இந்தத் தரவுகளை ஆய்வு செய்தஅணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம்” [PMANE] அமைப்பு, கல்பாக்கத்திற்குத் தொலைவில் உள்ள கிராமங்களை விட அருகில் உள்ள கிராமங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏழுமடங்கு அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது. இவர்களின் [PMANE] இந்த முடிவுகள் ஏற்கனவே அவர்களால் நடத்தப்பட்ட இதுபோன்ற ஆனால் அளவில் சிறிய ஆய்வு முடிவுகளை ஒத்திருந்தன ; இந்த ஆய்வில் மட்டும் தான் அணுசக்தித் துறையின் நிதி உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுத் தரவுகள் அவர்களால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அணுசக்தித் துறையின் ஆய்வில் [கல்பாக்கத்தில்] புற்றுநோய்க்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பது ஏன் ஆதாரங்களோடு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கு இந்திய அரசின் வல்லுநர் குழு சனவரி 2012இல் விளக்கம் கூறியது : அந்த ஆய்வு ஒரே ஒரு முறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது, மிகக்குறைந்த மக்களே ஆய்விற்கு உட்படுத்தப்பட்டார்கள், சமூகப் பொருளாதாரக் காரணிகள் பொருட்படுத்தப்படவில்லை மற்றும் தரவுகளின் மதிப்பீடு சரியானதாக இல்லாமல் இருந்தது என்பனவே அக்காரணங்கள். இந்த விவாதம் தொடர்கிறது.
 ‘HOOT’ வலைத்தளத்தின் இப்பக்கமானது, ‘தி இந்துநாளிதழ் கல்பாக்கம் அணு உலை குறித்த செய்திகளைக் கடந்த 15 மாதங்களாகசனவரி 1, 2011 முதல் மார்ச் 31, 2012 வரைஎப்படி வெளியிட்டு வந்தது என்பதை ஆய்வு செய்கிறது.
பின்புலம் : கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு
கல்பாக்கம் அணு உலையில் ஆறு பெரிய விபத்துகள் – 1988, 1991, 1999, 2001, 2002 மற்றும் 2003 –இல் நடந்துள்ளன.  அணு உலையில் உள்ள கதிர்வீச்சு நிறைந்த கனநீர் கசிவால் பணியாளர்களுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை குறித்த செய்திகள்இந்து’ ‘ஃப்ரண்ட்லைன்மற்றும்அவுட்லுக்ஆகிய இதழ்களில் வெளிவந்தன. 2005 –இல் ‘UNSCEAR’ அமைப்பு மேற்கொண்ட ஆய்வு, உலகிலேயே கல்பாக்கம் அணு உலையில் தான் அதிக அளவில் டிரிஷியம் வெளிப்படுவதாகச் சொல்லியது. கல்பாக்கம் அணு உலையினால் புற்றுநோயும் பிற நோய்களும் உண்டாவதற்கான காரணிகள் இருப்பதாகப் பல்வேறு அறிக்கைகளும் சுட்டிக்காட்டின.
அணுகுமுறை
இந்துஆன்லைன் தேடுபொறியில்கல்பாக்கம்என்ற குறிச்சொல்லைக் கொண்டு சனவரி 1 முதல் மார்ச் 31 வரை வெளிவந்த அனைத்துச் செய்திகளும் தரவிறக்கம் செய்து ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. ஒரே செய்தி மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டபோது அவை தவிர்க்கப்பட்டன. மொத்தம் 157 செய்திகள் கிடைத்தன. அவற்றில் அணு உலை தொடர்பற்ற செய்திகள் (கொள்ளைச் சம்பவங்கள், விபத்துகள் தொடர்பானவை) நீக்கப்பட்டன. ஆக 15 மாத கால அளவில் கல்பாக்கம் அணு உலையைக் குறித்து வெளிவந்த செய்திகள் 131. அவற்றுள் 31 செய்திகள் கல்பாக்கம் அணு நிறுவனம் நடத்திய அணு உலைக்கு அப்பாற்பட்ட வேறு சில செய்திகள் பற்றி இருந்தன. [உதாரணம் : IGCAR நிதி உதவியுடன் நடத்தப்பட்ட அறிவியல் முகாம்கள் பற்றிய அறிக்கை.] இறுதியான 100 செய்திகள் அணுசக்தி ஆற்றலைப் பற்றிப் பேசின.
கூர்ந்து கவனித்தபோது 71 செய்திகள் அணு உலைகளின் பாதுகாப்பைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தன. [இந்த71 செய்திகள் அணு உலைப் பாதுகாப்பு மற்றும் கல்பாக்கம் குறித்து பேசுபவையாக இருந்தபோதும் அவை அனைத்தும் கல்பாக்கத்தின் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே பேசவில்லை. சிலவேளைகளில் கல்பாக்கத்தின் அதிகாரிகள் கல்பாக்கம் பாதுகாப்பைப் பற்றி அல்லாமல் கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பைப் பற்றிப் பேசிய செய்திகளும் இடம்பெற்றிருந்தன.]
கண்டறியப்பட்டவை
1.   இந்துநாளிதழ் கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ரொம்பவும் அடக்கி வாசித்துள்ளது.
71 செய்திகளில் 37 செய்திகள் கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பானது என்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. 4 செய்திகள் மட்டுமே கல்பாக்கத்தின் பாதுகாப்பைக் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளன. பாதுகாப்பானது என்பதை வலியுறுத்திய 37 செய்திகளும் அறிவியல் அறிஞர்கள் அல்லது அரசியல்வாதிகளின் கருத்துக்களை மேற்கோள்காட்டி உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு, செய்தித் தலைப்பாகவே அமைந்துள்ளன. அவை : “கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பானது : அணுசக்தித் துறை அதிகாரி1கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பானது2 இவற்றைத் தவிர பிற செய்திகள் அதிகாரிகளின் கருத்துக்களைச் சொல்கின்றன : “கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் கடல்வாழ் உயிரிகளுக்கு எந்தத் தீய விளைவுகளும் ஏற்படவில்லை3 மேலும் ஒரு எடுத்துக்காட்டு: தி.மு.. தலைவர் கருணாநிதி,  இத்தனை வருடங்களில் சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கம் அணு உலை எந்தவித ஆபத்துகளையும் விளைவிக்காமல் இயங்கிக் கொண்டு வருகிறது4 [ அணு உலைகள் நிறுவப்படுதலை ஆதரிக்கும் கொள்கையுடைய கட்சித்தலைவரின் கூற்று இது என்பது கவனிக்கத்தக்கது. – மொ.ர்]
கல்பாக்கத்தின் பாதுகாப்பைக் குறித்துக் கேள்வி எழுப்பும் நான்கு செய்திகளில் அறிவியல் அறிஞர்கள் அல்லது அறிவியல் ஏடுகளின் மேற்கோள்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவைகளில் இரண்டு செய்திகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது தொடர்பானவை ; கடந்த பத்து ஆண்டுகளில் கல்பாக்கத்தில் மட்டும் 244 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக அந்த உண்ணாவிரதம் ஒருங்கிணைக்கப்பட்டதாக அவை அறிவித்தன.5 6 மற்ற இரண்டு செய்திகளும் புற்றுநோய் அல்லது விபத்துக் காரணிகளைக் குறிப்பிடாமல் கல்பாக்கம் அணு உலையை மூடவேண்டும் என்ற கருத்தை மட்டும் வெளியிட்டன. 7 8
கவனிக்க : மொத்தத்தில் இரண்டு செய்திகள் மட்டும் தான் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதைச் சொல்கின்றன.
2.   இந்துநாளிதழ் இந்த இரு எதிரெதிர் செய்திகளுக்கும் சம இடத்தை அளிக்கவில்லை.
 மாற்றுக் கருத்துகளுக்கு எந்த அளவு இடம் அளிக்கப்பட்டது என்பதன் அடிப்படையில் 71 செய்திகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவற்றிலிருந்து அறியப்பட்டவை இங்கே :


மொத்தச் செய்திகளின் எண்ணிக்கை
மாற்றுக் குரல்களை வெளிப்படுத்தும் செய்திகளின் எண்ணிக்கை
மாற்றுக் குரல்களை வெளிப்படுத்தும் செய்திகளின் வீதம்
கல்பாக்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செய்திகள்
37
0
0
கல்பாக்கத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செய்திகள்
4
0
0
அணுஆற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செய்திகள்
60
3
5
அணு ஆற்றலைக் கேள்விக்குள்ளாக்கும் செய்திகள்
11
3
27இந்தப் பகுப்பாய்வானதுஇந்துநாளிதழ் எப்படித் தன்னைத் தானே ஒரு சார்பாக நிறுத்திக் கொண்டது என்பதைக் காட்டுகிறது. “கல்பாக்கம் பாதுகாப்பானதுஎன்ற கருத்திற்கு அதன் எதிர்க் கருத்தைவிட 9 மடங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒரு சார்புத் தன்மையானதுகல்பாக்கம் பாதுகாப்பானதுஎன்ற பார்வை ஏற்படவே வழிவகுக்கிறது.
நவம்பர் 19, 2011 இல் வெளியிடப்பட்ட ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு : “கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான ஆய்வு, புற்றுநோயை அதிகப்படுத்தும் காரணிகள் அங்கு இல்லை எனச் சொல்வதாக மருத்துவர் வி.சாந்தா குறிப்பிடுகிறார்என அச்செய்தி தெரிவித்தது.9 ஆனால் எதிர்த் தரப்பினரின் கருத்துகள் இங்கு குறிப்பிடப்படவில்லை. மாற்றுக் கருத்துகளுடைய மருத்துவர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்களின் கருத்துக்கள் சுட்டிக்காட்டப்படவில்லை.

 3.’இந்துநாளிதழ் தான் முன்பு வெளியிட்ட செய்திகளை மறந்துள்ளது.
ஏப்ரல் 1999 மற்றும் ஆகஸ்ட் 2003 ஆகிய தேதிகளில் வெளிவந்த செய்திகளில் கல்பாக்கத்தில் பாதுகாப்பின்மையால் ஏற்பட்ட விளைவுகளைக் குறித்துஇந்துபல தகவல்களை வெளியிட்டிருந்தது.10 இந்த இரண்டு செய்திகளும் பிப்.2004 – இல் வெளியிடப்பட்ட பாதுகாப்பு மற்றும் தணிக்கை குறித்த கட்டுரையில் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டன.11

ஏழு வருடங்களுக்குப் பிறகு அந்தப் பெரிய விபத்துகளைஇந்துநாளிதழ் மறந்திருப்பதாகத் தெரிகிறது. இன்றைய செய்திகளில்இந்நாட்டின் அணுசக்தி நிலையங்கள் கடந்த 40 வருடங்களாக பெரிய பாதிப்புகள் எதுவும் இன்றி இயங்கி வருகின்றனஎன்பது போன்ற அதிகாரிகளின் கூற்றுகளையே அது சுட்டிக்காட்டுக்கிறது. பெரிய ஆபத்துகள் குறித்து தான் முன்பு வெளியிட்ட செய்திகளையும் கூட அது இப்போது குறிப்பிடுவதில்லை.12 அதேபோல அணு உலை தொடர்ந்து பாதுகாப்பாக செயல்பட்டு வருவதாக ஒரு செய்தியையும்13  கல்பாக்கத்தை மேற்கோள் காட்டி இந்திய அணு உலைகள் பாதுகாப்பாகச் செயல்படுவதாக இன்னொரு செய்தியையும்14 வெளியிட்டிருந்தது. கல்பாக்கம் குறித்த இந்த 37 செய்திகளில் எதுவும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பெரிய ஆபத்துகள் குறித்துப் பேசவில்லை.

முடிவு
இதன்மூலம், ‘இந்துநாளிதழ் தற்போது கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மூடி மறைக்கிறது என்பதை அறிய முடிகிறது.


REFERENCES

நன்றி :
1.ஆய்வாளர் ரோஷன் சந்திரன்,
2.The Hoot.
மொழிபெயர்ப்பும் குறிப்பும் மீனா.